உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டால் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டால் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தொழிற்துறை மந்திரி முருகேஷ் நிராணி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-02 20:24 GMT

பெங்களூரு:-

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. 3 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டின் கடைசி நாளில், எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பார். வருகிற 2025-ம் ஆண்டு மீண்டும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகள் வந்துள்ளன. பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் நிறுவனங்களை தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு, ரெயில் பயண நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கிறோம். இந்த முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும். இந்த மாநாடு மூலம் கர்நாடகத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்