மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை - மத்திய இணை மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது என்று ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-09 23:18 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:-

"சிவில் சர்வீசஸ் பணிகளில் நியமிக்கப்படும் பெண் ஊழியர்களும், மனைவியை இழந்த ஆண் ஊழியர்களும் தங்கள் மொத்த பணிக்காலத்தில் 2 மூத்த குழந்தைகளின் பராமரிப்புக்காக மொத்தம் 730 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவர். அக்குழந்தைகளின் 18 வயது வரை இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்