உத்தர பிரதேசம் கோசாலையில் 61 பசுக்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? மருத்து அறிக்கையில் தகவல்

கோசாலையில் 61 பசு மாடுகள் மர்மமான உயிரிழந்ததற்கு காரணம் என்ன என்பது உடல் கூராய்வுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

Update: 2022-08-07 13:54 GMT

லக்னோ,

 உத்தர பிரதேசத்தில் கோசாலையில் 61 பசு மாடுகள் மர்மமான உயிரிழந்ததற்கு காரணம் என்ன என்பது உடல் கூராய்வுக்கு பிறகு தெரியவந்துள்ளது. சிறுதானிய தீவினங்களை அதிக அளவு உட்கொண்டதால் ஏற்பட்ட நைட்ரேட் விஷத்தன்மை ஏற்பட்டு மாடுகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் திரிவேனி சிங் இது பற்றி கூறுகையில், கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், கோசலையில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த பசுக்களுக்கு உடல்கூராய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுகளில், பசுக்கள் அளவுக்கதிமகாக சிறுதானிய தீவினங்களை உட்கொண்டது தெரியவந்துள்ளது. அதில் அளவுக்கதிமான நைட்ரேட் சத்து உள்ளது.' என்றார்.

அதேபோல், இந்திய கால்நடைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை சைண்டிஸ்ட் மருத்துவர் கேபி சிங் கூறுகையில், அசுத்தமான தீவனத்தை அதிகமாக உண்பதால் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பசுக்களின் சிறுநீரகம், கல்லீரல் , இதயம், நுரையீரல் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் முடிவுகளும் கிடைத்த பிறகு பசுக்கள் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்