உத்தரபிரதேசத்தில் மூலிகை டீ குடித்த 5 பேர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-10-27 22:50 GMT

மெய்ன்புரி,

உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தில் வசித்தவர் சிவானந்தம் (வயது 35). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சிவானந்தம், அவரது மகன்கள் மற்றும் மாமனார், உறவினர் அருந்தி உள்ளனர்.

மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவானந்தம் உள்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சிவானந்தத்தின் மனைவி, டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்