டிரக் மீது கார் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி, ஒருவர் படுகாயம்

ராஜஸ்தானில் நேற்று இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-01-01 03:11 GMT

ஹனுமன்கர்,

ராஜஸ்தானில் நேற்று இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பிஸ்ராசர் கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் ஒன்று மோதியது. விபத்தை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.

விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்