எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபர்

எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-02 04:24 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள இடமண் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் கடந்த 2013-ம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும், அருகில் உள்ள தென்மலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் பழக்கம் இருந்து வந்தது.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 10 வயது சிறுவனுடன் அவர் நெருங்கிப் பழகி வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்போனில் ஓரினச் சேர்க்கை குறித்த வீடியோவை காண்பித்து சிறுவனிடம் அந்த நபர் பலமுறை ஓாின சோ்க்கையில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் அந்த வாலிபரின் தொல்லை அதிகரித்தது.

அதைத்தொடர்ந்து சிறுவன் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினான். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் உடனே தென்மலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் எய்ட்ஸ் நோயை பரப்புவதற்காக திட்டமிட்டு சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புனலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பைஜு அந்த நபருக்கு 3 ஆயுள் தண்டனையுடன், 22 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்தியாவிலேயே இதுமிகவும் மோசமான கொடூரமான சம்பவம் என்றும், இது போல எங்குமே தான் கேள்விப்பட்டதில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்