மும்பையில் போலீஸ் போல் நடித்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிய 4 பேர் கைது

துபாயில் இருந்து மும்பைக்கு வந்த நபரிடம் போலீஸ் போல் நடித்து தங்கத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-13 21:21 GMT

மும்பை,

துபாயில் இருந்து மும்பைக்கு வந்த நபரிடம் போலீஸ் போல் நடித்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் துபாயில் இருந்து வந்த ஆஷாக் ஜித்தா என்ற நபர் மும்பையில் ஆட்டோவில் மீரா சாலையை நோக்கிச் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று பேர், தாங்கள் போலீஸ் என்று கூறி ஆட்டோவை நிறுத்தினர்.

சோதனை என்ற பேரில் ஜித்தாவிடம் இருந்த 400 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளனர். ஜித்தாவை ஒரு காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விட்டு தங்கத்துடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜித்தா போலீசில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சாதிக் அலி சையத் (வயது 45), கலீம் ஷேக் (வயது 25), இர்பான் ஷேக் (வயது 39), கலீல் ஷா (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்