மைசூரு தசரா விழாவுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி

ஆடம்பரமாக கொண்டாட மைசூரு தசரா விழாவுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

Update: 2022-09-17 18:45 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக ெகாரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக ெகாண்டாடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக ெகாண்டாட அரசு முடிவு ெசய்துள்ளது.

இந்த ஆண்டு தசரா ெகாண்டாட்டத்துக்கு 14 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தசராவைெயாட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. இளைஞர் தசரா நேற்று முன்தினம் தொடங்கியது.

போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில் தசரா விழா குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தசராவைெயாட்டி அமைக்கப்பட்ட 16 துணை கமிட்டிகளின் அதிகாரிகள், மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, கலெக்டர் பகாதிகவுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில் துணை கமிட்டி குழுவினரின் கருத்துகளை மந்திரி எஸ்.டி.சோமசேகர் கேட்டறிந்து கொண்டார். பின்னா் இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாடுவது என்றும், இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு ெசய்யப்பட்டது. இதையடுத்து 2022-ம் ஆண்டுக்கான மைசூரு தசரா விழா போஸ்டரை மந்திரி எஸ்.டி.சோமசேகர் வெளியிட்டார். இந்த கூட்டம் முடிந்ததும் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.36 கோடி ஒதுக்கீடு

மைசூரு தசரா விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பழுதான சாலைகளை சரி ெசய்யும் பணி, அலங்கார பணி, பூங்காக்களில் அலங்கார பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடையும். வருகிற 26-ந்தேதி காலை 9.45 மணி முதல் 10.04 மணிக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு பூஜை ெசய்து தசரா விழாவை தொடங்கி வைப்பார். அவருடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் 7 மத்திய மந்திரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

இதனால் விழா மேடையில் ஜனாதிபதியுடன் கலந்துகொள்பவர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலுக்கு ஒப்புதல் வந்ததும் தசரா அழைப்பிதழ் அச்சடிக்கப்படும். இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட முடிவு ெசய்யப்பட்டுள்ளது. இதனால், தசரா விழாவுக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்விளக்கு அலங்காரம்

தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி, பொருட்காட்சி, விவசாயிகள் தசரா, உணவு மேளா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மைசூரு நகரம் முழுவதும் 123 கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்ண, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. 20-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கும் மின் அலங்காரம் செய்யப்படும். 23 இடங்களில் அலங்கார மின் விளக்குகளால் ஆன வரவேற்பு பலகை வைக்கப்படும். மின் அலங்காரத்துக்காக முதல்-மந்திரி பசவராஜ் ெபாம்மை தனியாக ரூ.4.50 கோடி ஊக்கத்தொகை வெளியிடுகிறார்.

10 நாட்கள் நடக்கும் ஆடம்பர தசரா விழாவில் எந்தவொரு குறையும், பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்