சன்னகிரியில் ரூ.6 லட்சம் சந்தன மரக்கட்டைகளை பதுங்கி வைத்திருந்த 3 பேர் கைது

சன்னகிரியில் ரூ.6 லட்சம் சந்தன மரக்கட்டைகளை பதுங்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-05 18:45 GMT

தாவணகெரே-

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா சந்தேபெண்ணூரில் சந்தன மரங்களை வெட்டி பதுங்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சந்தேபெண்ணூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த இஸ்மாயில், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த சமியுல்லா, சிவமொக்காவை சேர்ந்த ஜெயுப்கான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேப்போல், சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா உய்கெரே கிராமத்தில் தேக்கு மரங்களை வெட்டி வைத்திருந்ததாக இந்துவாணி கிராமத்தை சேர்ந்த பரதேஷ்,பிரதீப்,மஞ்சுநாத் ஆகிய 3 பேரை என்.ஆர்.புரா வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து என்.ஆர்.புரா வனத்துறையினர் மற்றும் சந்தேபெண்ணூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்