லடாக்: வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்பு
லடாக்கில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.;
கார்கில் ,
லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் தைசுருவின் யூல்ஜுக் கிராமத்தை சேர்ந்த முகமது ஷெரீப், குலாம் மெஹ்தி மற்றும் முகமது ஹாசன் ஆகிய 3 பேர் நீரில் அடுத்து செல்வதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர், மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆற்றில் அடித்து சென்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.