பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை: 3 பேர் கைது

பெங்களூருவில் பெண்ைண கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-22 21:46 GMT

பெங்களூரு: பெங்களூருவில் பெண்ைண கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளை

பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 2-வது கிராஸ், 2-வது பிளாக் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவர் தனது வீடு வாடகைக்கு விட உள்ளதாக தெரிவித்திருந்தார். பின்னர் கடந்த 9-ந் தேதி வீடு பார்க்க 3 வாலிபா்கள் வந்தனர். அவர்கள் மாடியில் சென்று வீடு பார்த்து கொண்டிருந்த போது, வீட்டுக்குள் கழிவுகள் இருப்பதாக கூறி பெண்ணை அழைத்தனர்.

அப்போது வீட்டுக்குள் வந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டதுடன், வாயில் பிளாஸ்டரை போட்டு மர்மநபர்கள் ஒட்டினார்கள். பின்னர் பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல்ககளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில், பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை நந்தினி லே-அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 3 பேர்மீதும் ஏற்கனவே திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதும், அந்த வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபின்பு மீண்டும் கொள்ளை சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்