மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது: ஆந்திர வாலிபர்கள் 3 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி ஆந்திர வாலிபர்கள் 3 பேர் பலியானார்கள்.

Update: 2022-12-06 21:40 GMT

ராய்ச்சூர்:

ஆந்திர மாநிலம் நந்தயால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ், சீனு, ஜெயபால், ஸ்ரீகாந்த். இவர்கள் 4 பேரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் வேலை செய்து வந்தனர். தற்போது நெல் அறுவடை எந்திரம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா கூடத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 4 பேரும் கூடத்தூரில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகராஜ், சீனு, ஜெயபால், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர்.


அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கர்நாடக அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் நாகராஜ், சீனு, ஜெயபால் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீகாந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மஸ்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்