பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபர் படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி 6 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்ஹம் மாவட்டம் நொஹ்முடி பகுதியை சேர்ந்தவர் குல்ஷன் கோபி (வயது 32). இவர் மஹ்ரா கிராமத்தை சேர்ந்த சுக்லால் சிங்கு என்பவரிடம் கடந்த ஒன்றை ஆண்டிற்கு முன் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு 1.50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், குல்ஷன் கொடுத்த பணத்தை சுக்லால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் செலவு செய்துள்ளார்.
இதனிடையே, தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொடுத்த 1.50 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தரும்படியும், அல்லது பணத்திற்கு பதில் நிலத்தை திரும்படி குல்ஷன் சுக்லாலிடம் தொடர்ந்து கேட்டுள்ளார்.
இந்நிலையில், பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த சுக்லால் கடந்த சனிக்கிழமை தனது தனது சகோதரர் யொஹல் சிங்கு மற்றும் சிந்து சிங்கு ஆகியோருடன் சேர்ந்து குல்ஷனை கூர்மையான ஆயுதங்களை கொண்டு படுகொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் குல்ஷனின் உடலை கைப்பற்றி சுக்லால் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.