டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு
டெல்லியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லிக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் இன்று இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த மாதம் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி நவம்பர் 9 ஆம் தேதி, டெல்லியில் 6.3 ரிக்டர் அளவிலும், நவம்பர் 12ஆம் தேதி மீண்டும் 5.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.