ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-10 18:45 GMT

பெங்களூரு: மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 பேரும் போதைப்பொருட்கள் விற்க முயன்ற போது போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள்.6 ஆண்டுக்கு முன்பு மாணவர்களுக்கான விசாவில் இந்தியாவுக்கு வந்த 2 பேரும், குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் போதைப்பொருட்களை விற்று வந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு 2 பேரும் போதைப்பொருட்களை விற்பனை செய்துள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்தும் 47 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் உள்பட ரூ.45 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேர் மீதும் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்