கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 24 பேர் பலி
கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் நேற்று மட்டும் 24 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது. கேரளா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.