காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாா் - ஹா்திக் படேல்
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.
அகமதாபாத்,,
2015-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தார்.
அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் இருந்தாா். கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் திடீரென பாஜகவை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க.வைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்த கருத்து காங்கிரசிற்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வந்தன.
குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினாா். சமீபத்தில் அவர், தன் பெயருடன் இருந்த ‘காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்’ என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கி இருந்தாா்.
இந்த நிலையில், ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டாில் தொிவித்துள்ளாா். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தொிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது டுவிட்டா் பதிவில்,
“தனது தைரியத்தைத் திரட்டி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளா்களும், குஜராத் மக்களும் வரவேற்பாா்கள். இதன் பிறகு நான் சிறப்பாக சேவையை மக்களுக்கு செய்ய முடியும் என நம்புவதாக அவா் தொிவித்துள்ளாா்.