ரிசர்வ் வங்கி மீது சரத்பவார் குற்றச்சாட்டு
ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு ஆதரவாக இல்லை என்று சரத்பவார் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.
பேட்டி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாந்தெட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொது மக்கள் மாநில வங்கிகளை விட தாங்கள் எளிதில் அணுக முடிந்த கூட்டுறவு வங்கிகளை நம்புகின்றனர். ஆனால் ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு ஆதரவாக இல்லை. மத்திய நிதி அமைச்சகம் இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அந்த துறையில் உள்ளவர்கள் கவனத்தில் இருந்து எங்களுக்கு இது தெரியவந்தது.
பெட்ரோல், டீசல் விலை
பீட், ஜால்னா மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்களில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே கரும்பு முழுமையாக அறைத்து முடிக்கும் வரை சர்க்கரை ஆலைகள் செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மராட்டியம் அதிக வரி கொடுக்கும் மாநிலம் என்பதால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.