காஷ்மீரின் பாகா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ
பாகா வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள ரேய்சி மாவட்டத்தில் பாகா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது. இதனால் பல மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா, அல்லது ஏதேனும் சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.