தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட 57 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

Update: 2022-05-12 09:49 GMT
புதுடெல்லி,

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர் பால சுப்பிரமணியன், ஏ விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின்  பதவிக்காலம் வரும்  ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. 

மேலும் செய்திகள்