அச்சுறுத்தும் 'அசானி புயல்' - 27 விமானங்கள் ரத்து

புயல் காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-10 11:06 GMT
விசாகப்பட்டிணம்,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. 

அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் கனமழை பெய்துவருகிறது. ஆந்திராவில் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை முதல் மிக கனமழையானது பெய்துவருகிறது. 

அதேபோல், ஒடிசாவிலும் இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. 

அசானி புயல் காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், விசாகப்பட்டிணம் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தமாக 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையிலும் 10 விமான சேவைகள் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்