மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் : தந்தை செய்த அசிங்கத்தை ரகசிய வீடியோ எடுத்து நீதி கேட்கும் சிறுமி
சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ரகசிய கேமராவை வைத்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதலத்தில் நீதி கேட்கும் பெண்
பாடனா
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசெராவை சேர்ந்தவர் 50 வயதுடைய நபர். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையின் நடத்தையை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று எண்ணிய மகள் பலாத்காரம் செய்யும் போது ரகசிய கேமராவை வைத்து வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மகள் தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை படம்பிடித்து, நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, காரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட தந்தையை கைது செய்துள்ளனர்.