மத்தியப்பிரதேசத்தில் உணவு விருந்து சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்: இருவர் கவலைக்கிடம்

மத்தியப்பிரதேசத்தில் உணவு விருந்து சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-06 11:26 GMT
கோப்புப்படம்
போபால்,

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

முல்டாய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறும்போது, உணவு விருந்தில் சாப்பிட்ட பலர் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தற்போது டிஸ்சார் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகளை உணவுத் துறையினர் ஆய்வுக்காகச் சேகரித்துள்ளனர். மேலும் உணவு விருந்தின் போது வழங்கப்பட்ட இனிப்பு உணவு விஷமாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் செய்திகள்