அன்னிய செலாவணி மோசடி: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,550 கோடி டெபாசிட் பறிமுதல்

சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,550 கோடி டெபாசிட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2022-04-30 19:52 GMT
புதுடெல்லி, 

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமியின் இந்திய கிளை நிறுவனம், ஜியோமி இந்தியா. இந்த நிறுவனம் ரூ.5,551.27 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை ராயல்டி என்ற போர்வையில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக அனுப்பியுள்ளது. அதன் தாய் நிறுவனமான ஜியோமியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி டெபாசிட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்த இந்த நிதி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்