கேரளாவில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்..!! மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

கேரளாவில் பொது இடங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-27 19:02 GMT
Image Courtesy: PTI
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கேரளாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை செயலாளர் விபி ஜாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005-ன் கீழ் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு சமீபத்தில் ரத்து செய்தது. ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்த பின்னர், மாநிலத்தில் அனைத்து பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்