தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது: பீதியடைய தேவையில்லை என மத்திய மந்திரி தகவல்

அனல் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு தேவையான 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-27 12:04 GMT
புதுடெல்லி,

 உக்ரைன்- ரஷிய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. தேவையான நிலக்கரியும் கிடைக்கவில்லை.

அதேசமயம் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 15சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சரம் தயாரிக்க அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இல்லை. இதனால் நாட்டின் சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. இதனையைடுத்து மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை இறக்குமதி செய்யவும், அதனை விரைவாக அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில்,  அனல் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு தேவையான 21.55 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் கோல் இந்தியா நிறுவனத்தின் கையிருப்புடன், ஒட்டுமொத்தமாக 72.5 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும்  நிலக்கரி பற்றாக்குறை குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை என அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்