டெல்லியில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இடிந்தது; 5 தொழிலாளர்கள் கதி என்ன?
டெல்லியில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
புதுடெல்லி,
டெல்லியின் சத்யநிகேதன் பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் அந்த பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கட்டிடம் இடிந்த செய்தியறிந்து மாவட்ட நிர்வாகத்தினரும் சென்றுள்ளனர். பொக்லைன் எந்திரங்களை கொண்டும் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் மீட்பு பணிக்கு உதவியாக செயல்பட்டு வருகின்றனர்.