“2047-க்குள் இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்” - அமித்ஷா பேச்சு

2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-23 19:13 GMT
பாட்னா,

வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற வீர் குன்வர் சிங்கின் நினைவு நாள் நேற்று பீகாரில் அனுசரிக்கப்பட்டது.  இதையடுத்து அவரது நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அமித்ஷா பேசியதாவது:-

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டு மக்களை காத்தது. தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது. மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வி.டி சவார்க்கார் 1857 நடைபெற்ற கிளர்ச்சியை சவார்க்கார் இந்தியாவின் முதல் சுதந்திர போர் என வர்ணித்துள்ளார். 2047 ஆம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில், உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவை வளர்ச்சி அடைய வைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.”

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்