இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனருடன் மன்சுக் மாண்டவியா சந்திப்பு
இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் பராம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்பதற்காக அவர் இங்கு வந்தார்.
தலைநகர் டெல்லியில் கெப்ரியேசசை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சந்தித்துப் பேசினார். அதுகுறித்து மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆயுர்வேதத்தை சர்வதேச மருத்துவ முறையாக வளர்ப்பது குறித்து கெப்ரியேசஸ் உடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, மாண்டவியாவுடன் டெல்லி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துக்கு கெப்ரியேசஸ் சென்று பார்வையிட்டார். அவர்களுடன், தென்கிழக்காசிய பிராந்திய உலக சுகாதார நிறுவன மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் சென்றார்.