ரெயில் கடந்து செல்ல தண்டவாளத்தில் படுத்தபடி மொபைலில் பேசும் பெண்
அந்த பெண்ணை கடுமையாக தண்டிக்க வேண்டும் என இணையத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி
ரெயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்து. ரெயில் தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று கடந்து செல்கிறது.
ரெயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவருகிறது. கையில் பை ஒன்றை வைத்துகொண்டு சாதாரணமாக எழுந்து வரும் அவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷூ கப்ரா, உயிரை விட புறம் பேசுவது தான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது.
மேலும் அந்த பெண்ணை கடுமையாக தண்டிக்க வேண்டும் என இணையத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியை டேக் செய்து சிலர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.