காஷ்மீர் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சி - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

காஷ்மீர் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2022-04-10 00:19 GMT
Image Courtesy: PTI
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை மெகபூபா சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டினார். 

இது தொடர்பாக மெகபூபா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் பாஜக அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் கைது செய்யப்படுகின்றனர். தினம் தினம் சோதனைகள் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

வெளிமாநிலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பணியமர்த்தப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது. நமது அடையாளங்கள் அழிக்கப்படுகிறது. இதை பிரதமர் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கையில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்