ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2022-04-09 03:25 GMT
image courtesy: ANI
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா பகுதியிலும்,  குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் இன்று பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.

குல்காமில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அனந்த்நாக்கில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி நிசார் தார் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்காக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்