கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 353- பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய 16,614- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 353- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 325- பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 16,614- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் 2,351- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இன்று ஏற்படவில்லை. ஆனாலும், முந்தைய உயிரிழப்புகள் ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 75 பேர் உயிரிழப்பு இன்று சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 95 பேருக்கும், திருவனந்தபுரத்தில் 68- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.