2 வயது தங்கையை மடியில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று வரும் 4ம் வகுப்பு சிறுமி! குவியும் பாராட்டு

அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை நானே அவளது படிப்பை கவனிப்பேன் என்று மணிப்பூர் சுற்றுச்சூழல் துறைக்கான மந்திரி உறுதியளித்துள்ளார்.

Update: 2022-04-04 11:33 GMT
மணிப்பூர்,

கல்வியே ஒருவரது எதிர்காலத்தை சிறப்பாக்கும் ஆயுதம். குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்வி அவர்களை வருங்காலத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கும். அதன்மூலம் மேம்பட்ட சமுதாயம் உருவாகும். அதிலும் பெண் கல்வி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும்.

அந்த வகையில், , நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது சகோதரியை  தன் மடியில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் கற்றுவரும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படம் மணிப்பூர்,  மின்சாரம், வனம் மற்றும் சுற்றுச்சூழல்  துறைக்கான  மந்திரி த.பிஸ்வஜித் சிங் கவனத்தை ஈர்த்துள்ளது. அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை நானே அவளது படிப்பை கவனிப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “கல்வியின் மீதான அவளின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது! அவளது பெற்றோர் விவசாயத்திற்காக வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருக்கும் அவள்,  தன் 2 வயது தங்கையை  மடியில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று பாடம் கற்றுவருகிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்