குஜராத் எலுமிச்சை பழம் கிலோ ஒன்றுக்கு அதிரடியாக ரூ.200 வரை உயர்வு
குஜராத்தில் காய்கறி சந்தையில் எலுமிச்சை பழம் கிலோ ஒன்றுக்கு அதிரடியாக ரூ.200 வரை உயர்ந்து உள்ளது.
ராஜ்கோட்,
குஜராத்தின் ராஜ்கோட்டில் காய்கறி சந்தையில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ இதற்கு முன்பு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென அவற்றின் விலை அதிரடியாக ரூ.200 வரை உயர்ந்து உள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் எலுமிச்சை பழத்தின் விலை முன்பே உயர்ந்து விட்டது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் திடீரென அதன் விலை ரூ.200 வரை உயர்ந்து உள்ளது.
இதனால் சமையல் பட்ஜெட் பாதிப்படைந்து உள்ளது என இல்லத்தரசிகள் கூறி வருகின்றனர். இந்த விலை உயர்வு எப்போது குறையும் என தெரியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.