புதினிடம் இருந்து தனிபட்ட முறையில் மோடிக்கு ஒரு செய்தி- ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

புதினிடம் இருந்து தனிபட்ட முறையில் பிரதமர் மோடிக்கு ஒரு செய்தியை இருப்பதாக ரஷிய வெளியுரவுத்துறை மந்திரி கூறினார்.

Update: 2022-04-01 10:08 GMT
Image Courtesy: @DrSJaishankar
புதுடெல்லி: 

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன.  இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷிய வெளியுறவுத்துறையின் இந்த வருகை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

ரஷியாவிற்கு  எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை முறியடிக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு "பின் விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில்  ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்பாக சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவதாக லாவ்ரோவ்  தெரிவித்து உள்ளார்.

அதுஇபர் ப்தினும் .  பிரதமர் மோடியும்  ஒருவரைருக்கொருவர்  தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.  எனது பேச்சுவார்த்தைகள் குறித்து அதிபரிடம்  நான் தெரிவிப்பேன். அவர் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து  உள்ளார்.  மேலும் இந்த தனிப்பட்ட  செய்தியை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கியதற்கு நான் பாராட்டுகிறேன். 

இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் வலுவாக உள்ளன.

எங்கள் உறவை நிலையானதாக மாற்றும் சமநிலையை எங்களால் கண்டறிய முடிந்தது. பயனுள்ள சந்திப்புகள் மற்றும் 2+2 பேச்சுக்களை நாங்கள் நடத்தியுள்ளோம். நான் புரிந்து கொண்ட வரையில், ஆற்றல், அறிவியல், மருந்துகள் போன்ற துறைகளில் நாங்கள் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உக்ரைனில் எங்களின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம், நீங்கள் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுகொள்ள  வேண்டும், ஒருதலைப்பட்சமாக அல்ல என கூறினார்.

தனது தொடக்க உரையில், ஜெய்சங்கர் பேசும் போது :-

எங்கள் உறவுகள் வளர்ந்துள்ளன, இந்த சந்திப்பு ர கடினமான சூழலில் நடைபெறுகிறது.

கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்.  இன்றைய சந்திப்பில், சமகால பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்