அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!!

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்

Update: 2022-03-30 23:12 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று (31-ந் தேதி) டெல்லி வருகிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைன் நெருக்கடி, இந்தோ-பசிபிக் நிலைமை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார். 

இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்  தனது டுவிட்டரில், “அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனுடன் பயனுள்ள உரையாடலை முடித்தேன். இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்