ஸ்ரீநகர் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஸ்ரீநகர் அருகே இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2022-03-29 21:31 GMT
கோப்புப்படம் (PTI)
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இன்று நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் ரெய்னாவாரி என்ற பகுதிக்கு அருகே பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  காஷ்மீர் ஐஜி காஷ்மீர் விஜய் குமார், “கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா/டிஆர்எப் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த இருவரும் பொதுமக்கள் கொலைகள் உட்பட பல சமீபத்திய பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள்” என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்