2024 ஆண்டில் இந்தியா முழுவதும் 5ஜி சேவை - ஏர்டெல் அறிவிப்பு!

ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை 2024க்குள் படிபடியாக இந்தியா முழுவதும் செயல்படுத்த போவதாக தெரிவித்துள்ளது

Update: 2022-03-29 07:07 GMT
புதுடெல்லி,

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல், 1983 ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸ் மீண்டும் உருவாக்க்கியதன் மூலம், தனது 5ஜி நெட்வோர்க் சேவையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. 

5ஜி சேவை மூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும். வளர்ந்து வரும் 5ஜி உலகிற்கு, ஏர்டெல் தயாராக உள்ளது.

ஏர்டெல்லின் 5ஜி சேவையின் மூலம் 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல், 20 எம்எஸ் லேட்டன்ஸிக்கும் குறைவாக கிடைக்கும் 4கே வீடியோக்களை 50 பயனர்கள் தடை இல்லாமல் ஸ்மார்ட்போனில் கண்டுகளித்தனர்.  மல்டிபிள் கேமரா ஆங்கிள், 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் ஆகியவையும் 5ஜி மூலம் காட்டப்பட்டது. 

இன்னும் 2  மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. மேலும் 2024க்குள் படிபடியாக இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்க போவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்