கேரளாவில் இன்று 558 பேருக்கு கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் இன்று 558 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 773 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 56 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
.வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்