நேபாள பிரதமர் அடுத்தமாதம் இந்தியா வருகை
3 நாள் அரசு முறை பயணமாக நேபாள பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
புதுடெல்லி,
நேபாள பிரதமர் ஷர் பகதூர் டியூபா அடுத்த மாதம் 1-ம் தேதி இந்தியா வர உள்ளார். அரசு முறை பயணமாக 3 நாட்கள் அவர் இந்தியா வர உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பகதூர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி இந்தியா வரும் பகதூர் டியூபா 3-ம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேபாளம் திரும்புகிறார்.