இந்தியாவில் மேலும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று அதிகரித்துள்ளது.

Update: 2022-03-24 04:29 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,778ஐ விட சற்று அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது. 

சிகிச்சை பெறுவோர்

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 ஆயிரத்து 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குணமடைந்தோர் எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 531 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழப்பு 

கொரோனா தாக்குதலுக்கு நேற்று 62 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது. 

தடுப்பூசி விவரம்

நாடு முழுவதும் இதுவரை 182 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 356 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, மார்ச் 16, 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, 72 லட்சத்திற்கும் அதிகமான (72,17,166) இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீள்வோர் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது.

மேலும் செய்திகள்