ஜம்முவில் நடைபெறும் சிஆர்பிஎஃப் எழுச்சி நாள் அணிவகுப்பு - அமித்ஷா பங்கேற்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் எழுச்சி நாள் அணிவகுப்பு ஜம்முவில் இன்று நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-19 05:52 GMT
ஸ்ரீநகர்,

இந்தியாவின் பாதுகாப்பு பணியில் மிகவும் முக்கியமான அங்கமாக செயல்பட்டு வரும் படைப்பிரிவுகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. 

நாட்டின் எல்லைகளை பாதுகாத்தல், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஈடுபடுத்தப்படுகிறது. இந்த படைப்பிரிவு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பிரிவு உருவாக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 83-வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.

மத்திய உள்துறை மந்திரி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவது வழக்கம்.

ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பு நிகழ்ச்சி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்