மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-03-18 00:19 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தின் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கும் நடவடிக்கையாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மந்திரிகள், சட்டசபை மற்றும் மேல்-சபையின் அரசியல் கட்சி தலைவர்கள், மேகதாது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள், கர்நாடக சட்ட நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்