கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,193 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 64,47,255 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 66,958 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவது கொரோனா பாதிப்பிலிருந்து ஒரேநாளில் 1,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது வரை மாநிலத்தில் 8,064 பேர் கொரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.