எனது வாழ்க்கை திறந்த புத்தகம் குமாரசாமி

முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் என்னை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-03-14 22:00 GMT

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் என்னை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இது அவரது பண்பை காட்டுவதாக உள்ளது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். எதையும் மூடி மறைப்பது இல்லை. என்னை பற்றி பேசும் சி.பி.யோகேஷ்வர் குடிசையில் இருந்தாரா?. மெகா சிட்டி திட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றியவர் தான் இந்த சி.பி.யோகேஷ்வர். சென்னபட்டணாவுக்கும், எங்களுக்கும் உள்ள தொடர்பு பழமையானது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்