இந்தியாவில் விமானிகளுக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு

இந்திய விமானங்களில் 87 வெளிநாட்டு விமானிகள் பணியாற்றி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-14 11:39 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டில் விமானிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதா? என மாநிலங்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு விமானப்போக்குவரத்துத்துறை இணை மந்திரி விகே சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

அதில் கூறியதாவது, நாட்டில் விமானிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. ஆனால், ஒரு சில குறிப்பிட்ட வகையிலான விமானங்களை இயக்குவதற்கான விமானிகளுக்கு தட்டுப்பாடு இருந்தது. அவை, வெளிநாட்டு விமானிகள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. 

நாட்டில் மொத்தம் 9 ஆயிரத்திற்கும் அதிகமான விமானிகள் பல்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளை சேர்ந்த 98 விமானிகள் இந்திய விமானங்களில் பணியாற்றி வருகின்றனர்’ என தெரிவிகப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்