ஜனவரி மாதத்தில் தொழில் உற்பத்தி 1.3 சதவீதம் உயர்வு
ஜனவரி மாதத்தில் தொழில் உற்பத்தி 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.3 சதவீதம் அதிகம் ஆகும்.
சுரங்கம், உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமே இதற்கு காரணம். இருப்பினும், மின்சார உற்பத்தி 0.9 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.