மரம் ஏற சிரமப்படும் தொழிலாளிகளுக்கு வந்தாச்சு மர ஸ்கூட்டர்..!

மரம் ஏறுவதற்காக 'மர ஸ்கூட்டர்' என்ற ஒன்றை மங்களூருவைச் சேர்ந்த கணபதி பட் உருவாக்கியுள்ளார்.

Update: 2022-03-10 16:18 GMT
மங்களூரு,

கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூருவைச் சேர்ந்த 50 வயதானவர் கணபதி பட். இவர் அறுவடைக்காக தினமும் 60 முதல் 70 அடி வரை உயரமுள்ள பாக்கு மரங்களில் ஏற வேண்டியுள்ளது. வயதாகிவிட்ட காரணத்தினால் மரம் ஏற சிரமமாக இருப்பதால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக இவரே ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். அதற்கு 'மர ஸ்கூட்டர்' (Tree Scooter) என்று பெயரிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு முதல் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்ததாக கூறிய பட், இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை ரூ. 40 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறினார். இந்த ஆராய்ச்சியை பட், அவருடைய பொறியியல் நணபர் ஒருவருடன் சேர்ந்து இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் இதுவரைக்கும் சுமார் 300 மர ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒரு மர ஸ்கூட்டரை ரூ. 62 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய கணபதி பட், 'இந்த கண்டுபிடிப்பின் மூலம் நான் மக்களுக்கு ஏதாவது செய்தேன் என்று பெருமைப்படுகிறேன். இப்போது என் வாழ்க்கை நிறைவடைந்ததாக உணர்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்