மும்பையில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் புதிதாக 362 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 68 ஆயிரத்து 813 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 லட்சத்து 17 ஆயிரத்து 362 பேர் குணமாகி உள்ளனர்.
தற்போது 3 ஆயிரத்து 709 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் 3 பேர் பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 740 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 61 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 726 பேர் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்து 733 பேர் குணமாகி உள்ளனர்.
தலைநகர் மும்பையில் 50-க்கும் கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது. புதிதாக 46 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் தொற்றுக்கு பலியானார். இதுவரை நகரில் 10 லட்சத்து 56 ஆயிரத்து 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் தொற்று பாதித்தவர்களில் 98 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 5 ஆயிரத்து 96 நாட்களாக உள்ளது.